News
APRIL 2026
3rd April 2026
தினம் ஒரு அகவல் 85
85. எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி !
உலகத்தின் உயிர்கள், நன்மைகளை வேண்டி எங்கிருந்துப் பிரார்த்தனை செய்தாலும், அந்தந்த இடங்களிலேயே இருந்து அருள் வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


