News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 91
- செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
செடியறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி !
செடியறுத்து – வல்வினைகளை போக்கி
வல்வினைத் துன்பங்கள் அனைத்தையும் அழித்து, அடியவர்கள் செழித்து வாழும் பொருட்டு, ஒளி உடலையும் (பிரணவ தேகம்), நிலைத்த பேரின்பத்தையும் (போகம்) தன்னுடைய அடியார்களுக்கு மட்டுமே வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


