Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

News

Our Gurunathar is so compassionate that he wishes every human being should attain liberation in this or ensuing rebirths. Our Gurunathar has blessed us with so many ways to achieve this like doing annathaanam (food donation to poor) at Ongarakudil, Thuraiyur as well as our branches all over the world like Malaysia, London and other disctricts of Tamil Nadu, conducting Thiru Vilakku Poojai, providing herbal nutritious porridge (arutkanji), feeding animals, eye camp, ambulance services etc.

MAY 2023

Back
16th May 2023
மகான் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோள்







அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோள்


அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க
வேண்டுகோள்

(இராமலிங்க சுவாமிகள்)

துவக்கப்பாடல்

திருஅருட்பா சுத்தசன்மார்க்க வேண்டுகோள்

நிறைவுப்பாடல்

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

திருமந்திரம்-1598

அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய திருஅருட்பா
சுத்தசன்மார்க்க வேண்டுகோள்

எண்சீரடி ஆசிரிய

அருட்பெருஞ்ஜோதி

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நானன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்தசிவ மார்க்கந்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
01

ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்ஜோதி யென்கையுறல் வேண்டும்
இறந்தவுயிர் தமைமீட்டு எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் றனைப்பிரியாது உறுதலும்வேண் டுவனே.
02

அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினையெங்குங் கண்டு உவத்தல் வேண்டும்
காணாத காட்சியெலாங் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத்து ஆடியிடல் வேண்டும்
உள்நாடி உயிர்களுறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியாது உறுகின்ற வுறவதுவேண் டுவனே.
03

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோ தியைப்பெற்றே யகம்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே யெழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே யடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுள ராகியுல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயு மொன்றாக இனிதுறல்வேண் டுவனே.
04

அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோ தியைப்பெற்றே அகமகிழ்தல் வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும் ஓர்ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேருங் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துஉவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி யெஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
05

அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர் எவ்உலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயு நானும்
ஒன்றாகி யெஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
06

அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம் ஆதியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கியொரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மாநான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகம்அனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
07

அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பு மாகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்ந்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி யந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
08

அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதுஎன் னெண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே யெனக்களித்தல் வேண்டும்
பிறியாதுஎன் னோடுகலந்து நீயிருத்தல் வேண்டும்
பெருமான்நின் றனைப்பாடி யாடுதல்வேண் டுவனே.
09

அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளலுனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை யுறல்வேண்டும் எனையடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
10

அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடையென்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி யடைந்துயிர்க ளெல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி யுடையவொரு திருவடிவில் யானும்
விமலாநீ யும்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
11

நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்க என்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.