Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

News

Our Gurunathar is so compassionate that he wishes every human being should attain liberation in this or ensuing rebirths. Our Gurunathar has blessed us with so many ways to achieve this like doing annathaanam (food donation to poor) at Ongarakudil, Thuraiyur as well as our branches all over the world like Malaysia, London and other disctricts of Tamil Nadu, conducting Thiru Vilakku Poojai, providing herbal nutritious porridge (arutkanji), feeding animals, eye camp, ambulance services etc.

MAY 2023

Back
13th May 2023
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்








அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்

image

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்

இந்த என்னை கிளிக் செய்வதன் மூலம் அந்த எண்ணின் பாடலுக்கு செல்லலாம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்சிவ நெறி சார் அருட்பெரு நிலைவாழ்

அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்

அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி

ஈனம்இன் றிகபரத்து இரண்டின்மேற் பொருளாய்

ஆனலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி10

உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்

அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே

ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்

ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி20

ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை

அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே

ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி

ஒளவியம் ஆதி ஓர் ஆறுந் தவிர்த்தபேர்

அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்

அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி

சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளி எனும்

அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி30

சுத்த மெய்ஞ்ஞானசுகோதய வெளிஎனும்

அத்து விதச்சபை அருட்பெருஞ்ஜோதி

தூய கலாந்தசுகந்தரு வெளிஎனும்

ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

ஞானயோகாந்த நடத்திரு வெளிஎனும்

ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

விமலபோதாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்

அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்

அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி40

சுத்த வேதாந்தத் துரியமேல் வெளிஎனும்

அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளிஎனும்

அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி எனும்

அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி

தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்

அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி

சச்சிதானந்தத் தனிப்பர வெளிஎனும்

அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி50

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளிஎனும்

ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி

காரண காரியங் காட்டிடு வெளி எனும்

ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

ஏகம் அனேகம் எனப்பகர் வெளி எனும்

ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்

ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி

என்றாதிய சுடர்க்கு இயல்நிலையாய் அது

அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி60

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்

அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி

முச்சுடர் களும் ஒளி முயங்குற அளித்தருள்

அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி

துரியமுங் கடந்த சுக பூரணந்தரும்

அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி

எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்

அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

இயற்கை உண்மையதாய் இயற்கையின்பமுமாம்

அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி70

சாக்கிரா தீதத் தனிவெளியாய் நிறைவு

ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்

அட்டமேற் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

நவந்தவிர் நிலைகளும் நண்ணும் ஓர்நிலையாய்

அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய

அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

சேகர மாம்பல சித்திநிலைக்கு எலாம்

ஆகர மாம்சபை அருட்பெருஞ்ஜோதி80

மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்

அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்

ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

வாரமும் அழியா வரமும் தருந்திரு

ஆரமு தாம்சபை அருட்பெருஞ்ஜோதி

இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்

அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

கற்பம் பலபல கழியினும் அழிவுறா

அற்புதம் தரும்சபை அருட்பெருஞ்ஜோதி90

எனைத்தும் துன்புஇலா இயலளித்து எண்ணிய

அனைத்தும் தருஞ்சபை அருட்பெருஞ்ஜோதி

பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி

ஆணிப்பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி

எம்பலம் எனத்தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி

அம்பலத்து ஆடல்செய் அருட்பெருஞ்ஜோதி

தம்பர ஞான சிதம்பரம் எனும்ஓர்

அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்

அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி100

வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே

ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி

நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்

ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி

கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்

அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு

ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

இன்புறுநானுளத் தெண்ணியாங்கு எண்ணியாங்கு

அன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி110

எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது

அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ்ஜோதி

பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்

அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

தனுகர ணாதிகள் தாம்கடந்து அறியும் ஓர்

அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த

அனுபவா தீத அருட்பெருஞ்ஜோதி120

பொதுவுணர்வு உணரும் போது அலால் பிரித்தே

அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி

உளவினில் அறிந்தால் ஒழியமற்று அளக்கின்

அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி

என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து

அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி

ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த

ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி

படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா

அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி130

பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்

அவனுக்கு அவனாம் அருட்பெருஞ்ஜோதி

திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்

அவளுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி

மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்

அதனுக்கு அதுவாம் அருட்பெருஞ்ஜோதி

எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்துமேல்

அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

வல்லதாய் எல்லாம் ஆகிஎல்லாமும்

அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி140

எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய்கண்டோர்

அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று

ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து

அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்

அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்

ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி150

பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்

அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி

காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்

ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று

அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி

இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய

அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி

நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே

ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி160

எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை

அண்ணி உள்ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி

மேயினை மெய்ப்பொருள் விளங்கினைநீ அது

ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி

எண்ணிற் செழுந்தேன் இனியதெள்ளமுதுஎன

அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி

சிந்தையில் துன்பொழி சிவம்பெறுக எனத் தொழில்

ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்

அங்கங்கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி170

சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்

அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி

சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்

அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

உபரச வேதியின் உபயமும் பரமும்

அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

மந்தணம் இது என மறுஇலா மதியால்

அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி

எம்புயக்கனி என எண்ணுவார் இதய

அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி180

செடியறுத் தேதிட தேகமும் போகமும்

அடியருக் கேதரும் அருட்பெருஞ்ஜோதி

துன்பு அறுத்துஒரு சிவதுரிய சுகந்தனை

அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி

பொதுவது சிறப்பது புதியது பழையது என்று

அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி

சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை

ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

ஓமயத் திருஉரு உவப்புடன் அளித்து எனக்கு

ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி190

எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு

அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி

எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு

அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி

இங்குறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு

அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி

பார்உயப் புரிகெனப் பணித்து எனக்கு அருளிஎன்

ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி

தேவிஉற்று ஒளிர்தரு திருஉருஉடன் எனது

ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி200

எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்

அவ்வழி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்

ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி

சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே

ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி

சத்தியமாம் சிவ சத்தியை ஈந்து எனக்கு

அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி

சாவா நிலை இது தந்தனம் உனக்கே

ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி210

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்

அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல்

ஆசறத்தெரித்த அருட்பெருஞ்ஜோதி

காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்

ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி

எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு

அங்குலம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி220

எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்

அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்

ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி

எண் தர முடியாது இலங்கிய பற்பல

அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி

சார் உயிர்க்கு எல்லாம் தாரக மாம்பரை

ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி

வாழி நீடூழி வாழியென்று ஓங்குபேர்

ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி230

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்துஇதை

ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி

எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுக என்று

அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி

நீடுக நீயே நீள்உலகு அனைத்தும் நின்று

ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி

முத்திறல் வடிவமும் முன்னிஆங்கு எய்துறும்

அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி240

கருமசித்திகளின் கலைபல கோடியும்

அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

யோகசித்திகள் வகை உறுபல கோடியும்

ஆக என்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

ஞான சித்தியின் வகைநல்விரிவு அனைத்தும்

ஆனி இன்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

புடைஉறு சித்தியின் பொருட்டே முத்தியை

அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது நிலைமுன் உறுசாதனம்

அத்தகவு என்றஎன் அருட்பெருஞ்ஜோதி250

சித்தி என்பதுநிலை சேர்ந்த அநுபவம்

அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி

ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்

ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி

இன்பசித்தியின் இயல்ஏகம் அனேகம்

அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி

எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென

அட்டநின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

இப்படி கண்டனை இனி உறுபடி எலாம்

அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி260

படிமுடி கடந்தனை பார் இதுபார் என

அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி

ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம்

ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

இந்த சிற்ஜோதியின் இயல்உறு ஆதி

அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே

ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

நல்லமுது என் ஒரு நா உளம் காட்டி என்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி270

கற்பகம் என் உளங் கைதனில் கொடுத்தே

அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

கதிர்நலம் என் இரு கண்களில் கொடுத்தே

அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

அருள் ஒளி என்தனி அறிவினில் விரித்தே

அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ்ஜோதி

பரை ஒளி என்மனப் பதியினில் விரித்தே

அரசது இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி280

ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்

ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று

ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி

பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம்

அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்

அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி

மாண்டு உழலாவகை வந்து இளங்காலையே

ஆண்டுகொண்டருளிய அருட்பெருஞ்ஜோதி290

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது

அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த

அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி

வாய்தற்கு உரித்தெனும் மறை ஆகமங்களால்

ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் வல்லசித்தெனக்கு அளித்து எனக்கு உனை

அல்லாது இலையெனும் அருட்பெருஞ்ஜோதி

நவைஇலா உளத்தில் நாடிய நாடிய

அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி300

கூற்றுதைத்து என்பால் குற்றமுங் குணங்கொண்டு

ஆற்றல்மிக் களித்த அருட்பெருஞ்ஜோதி

நன்று அறிவு அறியா நாயினேன் தனையும்

அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்

ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி

எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே

அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி310

ஏறாநிலைநடு ஏற்றி என்றனை ஈண்டு

ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி

தாபத்துயரம் தவிர்த்து உலகுஉறும் எலா

ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

மருட்பகை தவிர்த்துஎனை வாழ்வித்து எனக்கே

அருட்குரு ஆகிய அருட்பெருஞ்ஜோதி

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய

அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி

இருளறுத்து என்உளத்து எண்ணியாங்கு அருளி

அருள்அமுது அளித்த அருட்பெருஞ்ஜோதி320

தெருள்நிலை இது எனத்தெருட்டி என்னுளத்திருந்து

அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி

பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய

அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி

உருள்சகடு ஆகிய உளஞ்சலி யாவகை

அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி

வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்

அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி

சுருள்விரி வுடைமனச் சுழல் எலாம் அறுத்தே

அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி330

விருப்போடு இகல்உறு வெறுப்பும் தவிர்த்தே

அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி

அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட

அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி

உலகெலாம் பரவஎன் உள்ளத்து இருந்தே

அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி

01    ஐம்பூத இயல்வகை

விண்ணினுள் விண்ணாய் விண்நடு விண்ணாய்

அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி

விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்

அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி340

காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்

ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி

காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்

ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்

அனல்உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்

அனல்உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி

புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்

அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி350

புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்

அனை எனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி

புவியின் உட்புவியாய் புவி நடுப் புவியாய்

அவைதர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி

புவிஉறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்

அவைகொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி

விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி

அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி

அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி360

நெருப்பது நிலைநடுநிலை எலாம் அளவி

அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி

அவை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

02    மண்ணியல் விரி

மண்ணினில் திண்மையை வகுத்து அதில்கிடக்கை

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் பொன்மை வகுத்து அதில்ஐமையை

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி370

மண்ணினில் ஐம்பூவகுத்து அதில் ஐந்திறம்

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் நாற்றம் வகுத்து அதில் பல்வகை

அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் பற்பல வகைகருநிலை இயல்

அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில்பல்பயன்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பன்னிலை

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி380

மண்ணினில் ஐந்தைந்துவகையும் கலந்துகொண்டு

அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்இயற் சத்திகள் மண்செயற் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்உருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ஒளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்

அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி390

மண்நிலைச் சத்தர்கள் வகைபல பலவும்

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா

அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் பொருள்பல வகைவிரி வெவ்வெறு

அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்உறு நிலைபல வகுத்து அதில்செயல்பல

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணிடைப் பக்குவம் வகுத்து அதில்பயன்பல

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி400

மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும்

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

03    நீரியல் விரி

நீரினில் தண்மையும் நிகழ்ஊ ரொழுக்கமும்

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரினில் பசுமையை நிறுத்தி அதில்பல

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறவியல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை

ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி410

நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை நான்குஇயல் நிலவுவித்து அதில்பல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை அடிநடு நிலை உறவகுத்து அனல்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி420

நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல

ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல

ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல

ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

நீர்இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி430

04    தீயியல் விரி

தீயினில் சூட்டியல் சேர்தரச்செலவு இயல்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவா

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை பூஎலாம் திகழ்உறு திறம் எலாம்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை ஒளியே திகழ் உற அமைத்து அதில்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி440

தீயிடை மூவியல் செறிவித்து அதில்பல

ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி450

தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல

ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுஇயல்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீஇயல் பலபல செறித்து அதில்பலவும்

ஆய்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி460

05    காற்றியல் விரி

காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடைப்பூ இயல் கருதுறு திறவியல்

ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றினில் பெருநிலை கருநிலை அளவில

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடை ஈரியல் காட்டி அதில்பல

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி470

காற்றினில் இடைநடு கடைநடு அகம்புறம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில

ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி480

காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்

ஆற்றுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய

ஆற்றுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றினில் பக்குவக் கதியெலாம் விளைவித்து

ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி490

காற்றியல் பலபல கணித்து அதில்பிறவும்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

06    வெளி இயல் விரி

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்

அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்

அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும்

அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை

அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி500

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே

அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி

வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்

அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல

அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியிடைபலவே விரித்து அதில் பற்பல

அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வெளியிடை உயிர்இயல் வித்தியல் சித்தியல்

அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி510

வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்

அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

07    அகப்புற விரி

புறநடு வொடுகடை புணர்ப்பித்து ஒருமுதல்

அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறந்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை

அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்

அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை

அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி520

கருது அக நடுவொடு கடை அணைந்து அகமுதல்

அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தணிஅக நடுவொடு தலைஅணைந்து அகக்கடை

அணிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகநடு புறக்கடை அணைந்து அகப்புறமுதல்

அகம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகநடு புறத்தலை அணைந்து அகப்புறக்கடை

அகலிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகநடு அதனால் அகப்புற நடுவை

அகம்அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி530

அகப்புற நடுவால் அணிபுற நடுவை

அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி

புறநடு அதனால் புறப்புற நடுவை

அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புகல் அரும் அகண்ட பூரண நடுவால்

அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற

அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்

அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி540

அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்

அகத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம்

அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

08    ஐம்பூதக் கலப்பின் விரி

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்

ஆனற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்

அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி550

புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்

அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத

அகல்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி

09    வெளி வகை விரி

உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி

அயவெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி

உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்

அயல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த

அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி560

சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி

அத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரவெளி அதனைப் பரம்பர வெளியில்

அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரம்பரவெளியைப் பராபர வெளியில்

அரந்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்

அராவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்

அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி570

குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்

அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மனமுதல் கருவிகள் மன்உயிர் வெளியிடை

அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி

ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை

அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்

அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி580

10    அண்டப் பகுதி விரி

ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்

ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை

அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை

ஆவகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

அழித்தல்செய் தலைவரை அவர் அண்டங்களை

அழுக்கற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை

அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி590

தெளிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை

அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை

அந்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை

ஆங்காக அமைத்த அருட்பெருஞ்ஜோதி

சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை

அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நாதமாம் பிரமமும் நாத அண்டங்களும்

ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி600

பகர்பரா சத்தியைப் பதியும் அண்டங்களை

அகம் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை

அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

எண்ணில்பல் சத்தியை எண்ணில் அண்டங்களை

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அளவில்பல் சத்தரை அளவில் அண்டங்களை

அளவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

14    வித்தும் விளைவும்

வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவா

அத்தகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி610

விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க

அளவு செய்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வித்தும்பதமும் விளை உப கரிப்பும்

அத்திறல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வித்திடை முளையும் முளையிடை விளைவும்

அத்தக அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்

அத்திறம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்

அளைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி620

முளையதின் முளையும் முளையினுள் முளையும்

அளைதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்

அத்துற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

பதமதில் பதமும் பதத்தினுள் பதமும்

அதிர்வற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

15    ஒற்றுமை வேற்றுமை இயல்

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்

அற்றென வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய

அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி630

உறவினில் உறவும் உறவினில் பகையும்

அறன்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பகையினில் பகையும் பகையினில் உறவும்

அகைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்

ஆதியும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்

அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

உருவதின் உருவும் உருவினுள் உருவும்

அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி640

அருவினுள் அருவும் அருவதில் அருவும்

அருள்இயல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

கரணமும் இடமும் கலைமுதல் அணையும் ஓர்

அரண்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

உருவதில் அருவும் அருவதில் உருவும்

அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்

அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி650

பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்

அருள்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்

அண்மையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்

அன்மை அற்றமைத்த அருட்பெருஞ்ஜோதி

அடியினுள் அடியும் அடியிடை அடியும்

அடிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்

அடர்வுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி660

முடியினுள் முடியும் முடியினில் முடியும்

அடர்தர அமைத்த அருட்பெருஞ்ஜோதி

16    அகப் புறப்பூ

அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை

அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறப்பூ புறத்தில் புனையுறு வாக்கிட

அறத்துடன் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகப்புறப் பூஅகப் புறஉறுப் பியற்றிட

அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற

அறத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி670

17    நால்வகைத் தோற்ற விரி

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்

ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல

அசலற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை

அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற

அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி680

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல

அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

18    ஆண் பெண் இயல்

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

பெண்இயல் ஆணும் ஆண்இயல் பெண்ணும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி690

பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்

அண்டுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பெண்இயல் மனமும் ஆண்இயல் அறிவும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தனித்தனி வடிவினும் தக்க ஆண்பெண் இயல்

அனைத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

உனற்கரும் உயிர்உள உடல்உள உலகுள

அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்

ஆவகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி700

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்

ஐபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

19    காத்தருள் விரி

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை

ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை

அட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்

அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை

ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி710

உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை

அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை

அசைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

உயிர்உறும் உடலையும் உடல்உறும் உயிரையும்

அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை

ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும்

அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி720

வான்முகில் சத்தியால் மழைபொழி வித்து உயிர்

ஆனறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்து

அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்

அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்

அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்து

ஆவகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி730

அகப்புற அமுதளித்து ஐவர் ஆதிகளை

அகப்படக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

தருமக அமுதால் சத்தி சத்தர்களை

அருளினிற் காக்கும் அருட்பெருஞ்ஜோதி

காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும்

ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை

அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை

ஆகமுட் காக்கும் அருட்பெருஞ்ஜோதி740

கலையறிவு அளித்துக் களிப்பினில் உயிரெலாம்

அலைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

விடய நிகழ்ச்சியால் மிகுமுயிர் அனைத்தையும்

அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

துன்பளித்து ஆங்கே சுகமளித்து உயிர்களை

அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை

அரண்நேர்ந்து அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு

அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி750

எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு

அப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி

ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன

ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி

சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை

அல்லலில் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

சுத்தமும் அசுத்தமும் தோயுயிர்க் கிருமையின்

அத்தகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

வாய்ந்திடும் சுத்த வகையுயிர்க்கு ஒருமையின்

ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி760

எவையெலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின

அவையெலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

20    அடக்கியருள் விரி

அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்

அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

உயிருறும் இருவினை யுறுவிரிவு அனைத்தும்

அயர்வற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி720

காமப் புடைப்புயிர் கண் தொடராவகை

ஆமற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்

அங்கற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு

அதம்பெற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்

அடர்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை

அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி730

நால்வயிற் றுரிசும் நண்ணுயிர் ஆதியில்

ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்

ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மூவிடத்து இருமையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடத்து அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்

அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி740

சுத்தமா நிலையில் சூழுறு விரிவை

அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

21    திரை விளக்கம்

கரைவின்மா மாயைக் கரும்பெரும் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பேருறு நீலப்பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பச்சைத் திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி750

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

கலப்புத் திரையால் கருது அனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி760

திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே

அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி

22    அருளில் தெருட்டல்

தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி

சுத்தமா மாயைத் தொடர்பறுத்து அருளை

அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி

எனைத்து ஆணவமுதல் எல்லாம் தவிர்த்தே

அனுக்கிர கம்புரி அருட்பெருஞ்ஜோதி

விடய மறைப்பெல்லாம் விடுவித்து உயிர்களை

அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி760

சொருப மறைப்பெலாம் தொலைப்பித்து உயிர்களை

அருளினில் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே

அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே

அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்

அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி770

சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்தகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை

அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்

அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை

அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி780

தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை

அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை

ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ்ஜோதி

இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்

அறந்தலை அளித்த அருட்பெருஞ்ஜோதி

செத்தவர் எல்லாம் சிரித்து ஆங் கெழுதிறல்

அத்தகை காட்டிய அருட்பெருஞ்ஜோதி

இறந்தவர் எழுகவென்று எண்ணிஆங் கெழுப்பிட

அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி790

செத்தவர் எழுகெனச் செப்பிஆங் கெழுப்பிட

அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

சித்தெலாம் வல்ல திறலளித்து எனக்கே

அத்தனென்று ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி

23    தனிப் பொருள்

ஒன்றது இரண்டது ஒன்றின் இரண்டது

ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே

ஒன்றல இரண்டல ஒன்றின் இரண்டல

ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே

ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில

ஒன்றற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே800

24    மெய்ப் பொருள்

களங்கநீத்து உலகம் களிப்புற மெய்ந்நெறி

விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்

ஓவற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே

எழுநிலை மிசையே இன்புறு ஆகி

வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே

நவநிலை மிசையே நடுவுறு நடுவே

சிவமயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே

ஏகா தசநிலை யாதுஅதி னடுவே

ஏகா தனமிசை இருந்த மெய்ப்பொருளே810

திரையோ தசநிலை சிவவெளி நடுவே

வரைஓ தருசுக வாழ்க்கை மெய்ப்பொருளே

ஈரெண் ணிலைஎன இயம்புமேல் நிலையில்

பூரண சுகமாய்ப் பொருந்து மெய்ப்பொருளே

எல்லாநிலைகளும் இசைந்து ஆங்காங்கே

எல்லாம் ஆகி இலங்கு மெய்ப்பொருளே

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்

அனாதி உண்மையதாய் அமர்ந்த மெய்ப்பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்

ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப்பொருளே820

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்

பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்

உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே

அருவினுள் அருவாய் அருவரு அருவாய்

உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே

அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்

உலகெலாம் விளங்கும் ஒருதனிப்பொருளே

பொருளினுள் பொருளாய்ப்பொருளது பொருளாய்

ஒருமையின் விளங்கும் ஒருதனிப்பொருளே830

ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கெழு

கோடியும் விளங்கக் குலவு மெய்ப்பொருளே

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்

ஆட்டுற விளங்கும் அரும்பெரும்பொருளே

அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும்

பிறிவற விளக்கும் பெரும் தனிப்பொருளே

வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க

ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே

பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க

உற்றருள் ஆடல்செய் ஒரு தனிப்பொருளே840

25    பராபர இயல்

பரத்தினில் பரமே பரத்தின்மேற்பரமே

பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே

பரம்பெறும் பரமே பரம்தரும் பரமே

பரம்பதம் பரமே பரம் சிதம்பரமே

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே

பரஞ்சுக பரமே பரம்சிவ பரமே

பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே

தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும்பரமே

வரம்பரா பரமே வணம்பரா பரமே

பரம்பரா பரமே பதம்பரா பரமே850

26    பதவியல்

சத்தியபதமே சத்துவ பதமே

நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே

சித்துறு பதமே சிற்சுக பதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே

அம்பரம் பதமே அருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே

மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே

சிவந்தரு பதமே சிவசிவ பதமே860

27    சிவ ரகசியம்

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப்பதியே

பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்

பரமமே பரம பதந்தரும் சிவமே

அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்

நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

எம்பொருளாகி எமக்கருள் புரியும்

செம்பொருளாகிய சிவமே சிவமே

ஒருநிலை இதுவே உயர்நிலை யெனுமொரு

திருநிலை மேவிய சிவமே சிவமே870

மெய்வைத்து அழியா வெறு வெளி நடுவுறு

தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்

சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்

செல்வமும் அளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்

தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே

சத்தெலாம் ஆகியும் தானொரு தானாம்

சித்தெலாம் வல்லதோர் திருவருட்சிவமே880

எங்கே கருணை இயற்கையின் உள்ளன

அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே

யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச்

சீரே அளிக்கும் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனையருள்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவருள் நெறியெனப்

பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே890

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல

உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே

உயிருள்யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே

இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்

உயிரொளிகாண்க வென்றுரைத்த மெய்ச்சிவமே

28    திருவருள் வல்லபம்

அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்

அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே

அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை

அருளுற முயல்கவென்று அருளியசிவமே900

அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்

இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே

அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும்

தெருளிது எனவே செப்பிய சிவமே

அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்

மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே

அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்

மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே

அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு

இருட்பேறு அறுக்கும் என்றியம் பியசிவமே910

அருள்தனி வல்லபம் அதுவே எலாஞ்செய்

பொருள்தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே

அருளறியார் தமை அறியார் எம்மையும்

பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே

அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை

பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே

அருள் வடிவு அதுவே அழியாத் தனிவடிவு

அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே

அருளே நம்மியல் அருளே நம்முரு

அருளே நம்வடிவாம் என்ற சிவமே920

அருளே நம்மடி அருளே நம்முடி

அருளே நம்நடு வாம் என்ற சிவமே

அருளே நம்மறிவு அருளே நம்மனம்

அருளே நம்குணமாம் என்ற சிவமே

அருளே நம்பதி அருளே நம்பதம்

அருளே நம்மிடமாம் என்ற சிவமே

அருளே நம்துணை அருளே நம்தொழில்

அருளே நம் விருப்பாம் என்ற சிவமே

அருளே நம்பொருள் அருளே நம் ஒளி

அருளே நாம் அறிவாயென்ற சிவமே930

அருளே நம்குலம் அருளே நம்இனம்

அருளே நாம் அறிவாயென்ற சிவமே

அருளே நம்சுகம் அருளே நம்பெயர்

அருளே நாம்அறி வாயென்ற சிவமே

அருளொளி அடைந்தனை அருளமுது உண்டனை

அருண்மதி வாழ்கவென்று அருளிய சிவமே

அருள்நிலை பெற்றனை அருள்வடிவு உற்றனை

அருளரசு இயற்றுகென்று அருளிய சிவமே

29    சிவபதி

உள்ளகத் தமர்ந்தெனது உயிரிற் கலந்தருள்

வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே940

நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்

தகவொடு காக்கும் தனிச் சிவபதியே

சுத்த சன்மார்க்க சுகநிலை தனிலெனைச்

சத்தியன் ஆக்கிய தனிச் சிவபதியே

ஐவரும் காண்டற்கு அரும் பெரும்பொருளென்

கைவரப்புரிந்த கதிசிவ பதியே

துன்பம் தொலைத்தருள் ஜோதியால் நிறைந்த

இன்பம் எனக்கருள் எழிற் சிவபதியே

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை

ஒத்துற வேற்றிய ஒரு சிவபதியே950

கையறவு அனைத்துங் கடிந்து எனைத்தேற்றி

வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ

றன்பொடுஎன் கண்ணுறும் அருட்சிவபதியே

பிழையெலாம் பொறுத்து எனுள்பிறங்கிய கருணை

மழையெலாம் பொழிந்து வளர் சிவபதியே

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது

குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே

30    அருள் குரு

பரமுடன் அபரம்பகர்நிலை இவையெனத்

திரமுற அருளிய திருவருட் குருவே960

மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்

திதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்

குணமுறத் தெரித்து உட்குலவு சற்குருவே

பதிநிலை பசுநிலை பாசநிலை எலாம்

மதியுறத் தெரித்து உள்வயங்கு சற்குருவே

பிரம ரகசியம் பேசி என்னுளத்தே

தரமுற விளங்கும் சாந்த சற்குருவே

பரம ரகசியம் பகர்ந்து எனதுளத்தே

வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே970

சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே

நவநிலை காட்டிய ஞான சற்குருவே

சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்

அத்தகை தெரித்த அருட்சிவ குருவே

அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே

பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே

கேட்பவை எல்லாம் கேட்பித்து எனுள்ளே

வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே

காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே

மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே980

செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே

உய்பவை அளித்தெனுள் ஓங்கு சற்குருவே

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்

பண்பினில் விளங்கும் பரம சற்குருவே

சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து

ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே

சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்

மெய்த்தகை அளித்தெனுள் விளங்கு சற்குருவே

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்

வல்லான் எனவெனை வைத்த சற்குருவே990

31    உயிர்த் தாய்

சீருற அருளாம் தேசுற வழியாப்

பேருற என்னைப் பெற்ற நற்றாயே

பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்

பெருந்தயவால் எனைப் பெற்ற நற்றாயே

ஆன்ற சன்மார்க்கம் அணிபெற எனைத்தான்

ஈன்றமுது அளித்த இனிய நற்றாயே

பசித்திடுதோறும் என்பால் அணைந்து அருளால்

வசித்தமுது அருள்புரி வாய்மை நற்றாயே

தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை

உளந்தெளி வித்த ஒருமை நற்றாயே1000

அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்

தெருளுற எனக்கருள் செல்வ நற்றாயே

இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்

உயலுற எனக்கருள் உரிய நற்றாயே

நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்

பண்புற எனக்கருள் பண்புடைத்தாயே

மற்றுள அமுத வகையெலாம் எனக்கே

உற்றுணவு அளித்தருள் ஓங்கு நற்றாயே

கலக்கமும் அச்சமும் கடிந்து என துளத்தே

அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத்தாயே1010

துய்ப்பினி லனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு

எய்ப்பெலாம் தவிர்த்த இன்புடைத்தாயே

சித்திகளெல்லாம் தெளிந்திட எனக்கே

சத்தியை அளித்த தயவுடைத் தாயே

சத்தினி பாதந் தனையளித்து எனைமேல்

வைத்தமு தளித்த மரபுடைத்தாயே

சத்தி சத்தர்கள்எலாம் சார்ந்தெனது ஏவல்செய்

சித்தியை அளித்த தெய்வ நற்றாயே

தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே

என்னை மேலேற்றிய இனிய நற்றாயே1020

வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே

அளித்தளித்து இன்புசெய் அன்புடைத் தாயே

எண்அகத் தொடுபுறத்து என்னைஎஞ் ஞான்றும்

கண்ணெனக் காக்கும் கருணை நற்றாயே

இன்னருள் அமுதளித்து இறவாத் திறல்புரிந்து

என்னை வளர்த்திடும் இன்புடைத்தாயே

என்னுடல் என்னுயிர் என்னறிவு எல்லாம்

தன்னவென் றாக்கிய தயவுடைத்தாயே

தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்

தரியாது அணைத்த தயவுடைத் தாயே1030

சினமுதல் அனைத்தையும் தீர்த்தெனை நனவினும்

கனவினும் பிரியாக் கருணை நற்றாயே

தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும்

ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே

32    உயிர்த் தந்தை

துன்பெலாந் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப

இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே

எல்லா நன்மையும் என்றனுக்கு அளித்த

எல்லாம் வல்லசித்து என்தனித் தந்தையே

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய

தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே1040

அறிவிலாப் பருவத்து அறிவெனக்கு அளித்தே

பிறிவிலாது அமர்ந்த பேரருள் தந்தையே

புன்னிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த

தன்னிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினும் அமர்ந்த அருட்ஜோதி

சகத்தினில் எனக்கே தந்த மெய்த்தந்தையே

இணையிலாக் களிப்புற்று இருந்திட எனக்கே

துணையடி சென்னியில் சூட்டிய தந்தையே

ஆதியீறு அறியா அருளரசு ஆட்சியில்

ஜோதிமா மகுடம் சூட்டிய தந்தையே1050

எட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிப்

பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே

தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்

செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

தன்பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்

என்பொருள் ஆக்கிய என்றனித் தந்தையே

தன்வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்

என்வடிவு ஆக்கிய என்றனித் தந்தையே

தன்சித் தனைத்தையும் தன் சமுகத்தினில்

என்சித் தாக்கிய என்றனித் தந்தையே1060

தன்வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்

என்வசம் ஆக்கிய என்னுயிர்த் தந்தையே

தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை

என்கையில் கொடுத்த என்றனித் தந்தையே

தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும்

என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே

தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்

என்ன இயற்றிய என்றனித் தந்தையே

தன்உரு என்உரு தன்உரை என்உரை

என்ன இயற்றிய என்றனித் தந்தையே1070

சதுரப் பேரருள் தனிப்பெரும் தலைவனென்று

எதிரற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே

மனவாக்கறியா வரைப்பினில் எனக்கே

இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே

உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை

அணைந்திட எனக்கே அருளிய தந்தையே

துரிய வாழ்வுடனே சுகபூரணமெனும்

பெரிய வாழ்வளித்த பெருந்தனித் தந்தையே

ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த

பேறளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே1080

எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்

அவ்வகை நிலையெனக் களித்த நற்றந்தையே

இனிப் பிறவாநெறி எனக்களித்து அருளிய

தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே

33    உயிர்த் துணை

பற்றயர்ந்து அஞ்சிய பரிவுகண் டணைந்து எனைச்

சற்றுமஞ்சேல் எனத் தாங்கிய துணையே

தளர்ந்தவத் தருணம்என் தளர்வெலாம் தவிர்த்துட்

கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த்துணையே

துறையிது வழியிது துணிவிது நீசெயும்

முறையிது எனவே மொழிந்த மெய்த்துணையே1050

எங்குறு தீமையும் எனைத்தொடரா வகை

கங்குலும் பகலும் மெய்க்காவல் செய்துணையே

வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே

ஈண்டிருந்து அருள்புரி என்னுயிர்த் துணையே

இகத்தினும் பரத்தினும் எனக்குஇடர் சாராது

அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே

34    உயிர் நட்பு

அயர்வற எனக்கே அருட்துணை யாகிஎன்

உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே

அன்பினில் கலந்து எனதறிவினில் பயின்றே

இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே1060

நான் புரிவன எலாம்தான் புரிந்து எனக்கே

வான்பதம் அளிக்க வாய்த்த நன்நட்பே

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு

எள்ளுறு நெய்யில் என்உள்ளுறும் நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த

குற்றமும் குணமாக் கொண்ட என்நட்பே

குணங்குறி முதலிய குறித்திடாது எனையே

அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்

கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் நட்பே1070

சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்

கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநன் நட்பே

35    உயிர் உறவு

களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்கு

இளைப்பறிந்து உதவிய என்னுயிர் உறவே

தன்னைத் தழுவுறு தரஞ்சிறிது அறியா

என்னைத் தழுவிய என்னுயிர் உறவே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித்து என்றும்

எனக்குறவு ஆகிய என்னுயிர் உறவே

துன்னும் அனாதியே சூழ்ந்துஎனைப் பிரியாது

என்னுறவு ஆகிய என்னுயிர் உறவே1080

36    இயற்கை உண்மை (சத்து)

என்றுமோர் நிலையாய் என்றுமோர் இயலாய்

என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே

அனைத்துலகு அவைகளும் ஆங்காங்கு உணரினும்

இனைத்தென அறியா என்தனிச் சத்தே

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்

இதுவெனற்கு அரிதாம் என்தனிச் சத்தே

ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்

ஏகுதற்கு அரிதாம் என்தனிச் சத்தே

சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே

இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே1090

துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருளென

உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச்சத்தே

அன்றதன் அப்பால் அதன்பரத்து அதுதான்

என்றிட நிறைந்த என்தனிச் சத்தே

37    இயற்கை விளக்கம் (சித்து)

என்றும் உள்ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய்

என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே

சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்

இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்

இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே1100

படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்

இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்

ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே

உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்

இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே

அறிவவை பலவாய் அறிவன பலவாய்

எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே

நினைவவை பலவாய் நினைவன பலவாய்

இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே1110

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்

ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்

எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே

அண்டசராசரம் அனைத்தையும் பிறவையும்

எண்தர விளக்கும் என்தனிச் சித்தே

எல்லாம் வல்லசித்து எனமறை புகன்றிட

எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே

38    இயற்கை இன்பம் (ஆனந்தம்)

ஒன்றதில் ஒன்றென்று உரைக்கவும் படாதாய்

என்றும் ஓர் படித்தாம் என்தனி இன்பே 1120

இதுஅது என்னா இயலுடை அதுவாய்

எதிர்அற நிறைந்த என்தனி இன்பே

ஆக்குறு மவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்

ஏக்கற நிறைந்த என்தனி இன்பே

அறிவுக்கு அறிவினில் அதுஅது அதுவாய்

எறிவற்று ஓங்கிய என்தனி இன்பே

விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை

இடையிடை ஓங்கிய என்தனி இன்பே

இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்

எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே1130

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்

எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே

எல்லாநிலைகளின் எல்லா உயிருறும்

எல்லா இன்புமாம் என்தனி இன்பே

39    அருள் அமுதம்

கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்

விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்

குணங்கொள் கோல்தேனும் கூட்டி ஒன்றாக்கி

மணங்கொளப் பதஞ்செய் வகை உற இயற்றிய

உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா

வணமுறும் இன்ப மயமே அதுவாய்க்

கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய்

நலந்தரு விளக்கமும் நவிலரும் தண்மையும்

உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்

உள்ளதாய் என்றன் உயிருளம் உடம்புடன்

எல்லாம் இனிப்ப இயலுறு சுவையளித்து

எல்லாம் வல்லசித்து இயற்கைய தாகிச்

சாகா வரமும் தனித்த பேரறிவும்

மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

மயக்கறத் தருந்திறல் வண்மையதாகிப்

பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி

ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்தென தறிவாம் கனமேற் சபைநடு

நடந்திகழ் கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

சத்திய அமுதே தனித்திரு அமுதே

நித்திய அமுதே நிறைசிவ அமுதே

சச்சி தானந்தத் தனி முதல் அமுதே

மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருளொளி அமுதே

தானந்தம் இல்லாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

சிவநிலை தனிலே திரண்ட உள்ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

கைபடாப் பெருஞ்சீர் கடவுள் வானமுதே

அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்தநான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

தனிமுதல் ஆய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே

40    மணி

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய பரம்பர மணியே

பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய பராபர மணியே

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற

அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறல் மணியே

விண்பதம் அனைத்தும் மேல்பதம் முழுவதும்

கண்பெற நடத்தும் ககனமா மணியே

பார்பதம் அனைத்தும் பகரடி முழுவதும்

சார்புற நடத்தும் சரவொளி மணியே1180

அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்

கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே

சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்

விராவி யுள்விளங்கும் வித்தக மணியே

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்

தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே

தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா

வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

நவமணி முதலிய நலமெலாம் தருமொரு

சிவமணி எனும் அருட்செல்வமா மணியே1190

41    மந்திரம்

வான் பெறற்கு அரியவகையெலாம் விரைந்து

நான் பெறவளித்த நாத மந்திரமே

கற்பம் பலபல கழியினும் அழியாப்

பொற்புற அளித்த புனித மந்திரமே

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்

வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே

ஐந்தென எட்டென ஆறென நான்கென

முந்துறு மறைமுறை மொழியு மந்திரமே

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்

ஓதநின்று உலவாது ஓங்கு மந்திரமே1200

42    மருந்து

உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணி யனைத்தையும்

அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே

சித்திக்கு மூலமாம் சிவமருந்து எனவுளம்

தித்திக்கு ஞானத் திருவருள் மருந்தே

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்

சிறந்தவல் லபமுறு திருவருள் மருந்தே

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீர் உடையநன் மருந்தே1210

என்றே என்னினும் இளமையோடு இருக்க

நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே

மலப்பிணி தவிர்த்தருள் வலம்தரு கின்றதோர்

நலத்தகை அதுவென நாட்டிய மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே

43    மாற்றறியாப் பொன்

இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்

தடை ஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்

மாற்றிவை என்ன மதித்து அளப்பரிதாய்

ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை அதுவாய்1220

காட்சிக் கினியநற் கலையுடை அதுவாய்

ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்

கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச்

செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

உளம்பெறும் இடமெலாம் உதவுக எனவே

வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்

வடம்படா நலமும் வாய்த்த செம்பொன்னே

மும்மையும் தருமொரு செம்மையை உடைத்தாய்

இம்மையே கிடைத்து இங்கிலங்கிய பொன்னே1230

எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது

அடுத்தடுத்து ஓங்குமெய் அருளுடைப்பொன்னே

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேமெனக்

கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே

எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை

அண்ணி என்கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே

நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப்

போகேம் என எனைப் பொருந்திய பொன்னே

எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்

பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே1240

விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்

புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே

நால்வகை நெறியினும் நாட்டுக எனவே

பால்வகை முழுதும் பணித்த பைம்பொன்னே

எழுவகை நெறியினும் இயற்றுக எனவே

முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

44    உலவா நிதி

எண்ணியபடி எலாம் இயற்றுக என்றெனைப்

புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே

ஊழிதோ றூழி உலப்புறாது ஓங்கி

வாழி என்று எனக்கு வாய்த்த நன்னிதியே1230

இதமுற வூழிதோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு

உதவினும் உலவாது ஓங்கு நன்னிதியே

இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்

திருநிதி எல்லாம் தரும் ஒருநிதியே

எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை

அவ்வகை கிடைக்குமென்று அருளிய நிதியே

அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே

கற்பனை கடந்த கருணைமா நிதியே

நற்குண நிதியே சற்குண நிதியே

நிற்குண நிதியே சிற்குண நிதியே1240

45    ஜோதி மலை

பளகிலாது ஓங்கும் பளிக்குமா மலையே

வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கும் மரகத மலையே

வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனம் கடந்தாங்கு ஓங்குபொன் மலையே

துரியமேல் வெளியில் ஜோதிமா மலையே

46    இயற்கைப் பொருண்மை

புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்

அற்புதக் கடலே அமுதத்தண் கடலே

இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய

அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே1250

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோது அருகே

உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே

என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்

நன்றுற விளங்கிய நந்தனக்காவே

சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்

ஊற்றுநீர் நிரம்பஉடைய பூந்தடமே

கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே

மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

களைப்பறக் கிடைத்த கருணை நன்னீரே

இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே1260

தென்னைவாய்க் கிடைத்த செவ்விளநீரே

தென்னை வான் பலத்தில் திருகுதீம் பாலே

நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே

வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே

இட்ட நற்சுவைசெய் இலந்தையங் கனியே

புனிதவான் தருவில் புதுமையாம் பலமே

கனி எலாங் கூட்டிக் கலந்த தீஞ்சுவையே

இதந்தரு கரும்பில் எடுத்த தீஞ்சாறே

பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே1270

சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே

ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே

உலப்புறாது இனிக்கும் உயர்மலைத் தேனே

கலப்புறா மதுரம் கனிந்த கோல்தேனே

நவையிலாது எனக்கு நண்ணிய நறவே

சுவையெலாம் திரட்டிய தூயதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசு நறும்பாலே

இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே

உலர்ந்திடாது என்றும் ஒரு படித்து ஆகி

மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே1280

இகந்தரு புவிமுதல் எவ்வுலகு உயிர்களும்

உகந்திட மணக்கும் சுகந்த நல்மணமே

யாழுறும் இசையே இனிய இன்னிசையே

ஏழுறும் இசையே இயல் அருளிசையே

திவள்ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே

அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே

நாதநல் வரைப்பில் நண்ணிய பாட்டே

வேதகீதத்தில் விளை திருப்பாட்டே

நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே

சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே1290

நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே

எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே

என்மனக் கண்ணே என் அருட் கண்ணே

என் இரு கண்ணே என்கணுண் மணியே

என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே

என்பெருந் திறலே என் பெரும் செயலே

என்பெருந் தவமே என்தவப் பலனே

என்பெரும் சுகமே என்பெரும் பேறே

என்பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே

என்பெரு வழக்கே என்பெரும் கணக்கே1300

என்பெரு நலமே என்பெரும் குலமே

என்பெரு வலமே என் பெரும்புலமே

என்பெரு வரமே என்பெரும் தரமே

என்பெரு நெறியே என்பெரு நிலையே

என்பெரும் குணமே என்பெரும் கருத்தே

என்பெருந் தயவே என்பெரும் கதியே

என்பெரும் பதியே என்னுயிர் இயலே

என்பெரு நிறைவே என்தனி அறிவே

47    தனி அன்பு

தோலெலாம் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும்

மேலெலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட1310

என்பெலாம் நெக்குநெக்கு இயலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசையெலாம் மெய்யுறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்

உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட

மடலெலாம் மூளை மலர்ந்திட அமுதம்

உடலெலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திட

தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்

கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட1320

வாய்துடித்து அலறிட வளர்செவித் துணைகளில்

கூயிசைப் பொறியெலாம் கும்மெனக் கொட்டிட

மெய்யெலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்

கையெலாம் குவிந்திடக் காலெலாம் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட

இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப் பமைந்திடச்

சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுறு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்

பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்1330

தத்துவம் அனைத்தும் தாம்ஒருங்கு ஒழிந்திடச்

சத்துவம் ஒன்றே தனித்துநின்று ஓங்கிட

உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட

அலகிலா அருளின் ஆசைமேல் பொங்கிட

என்னுளத் தெழுந்து உயிர்எல்லாம் மலர்ந்திட

என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே

பொன்னடி கண்டுஅருட் புத்தமுது உணவே

என்னுளத்து எழுந்த என்னுடை அன்பே

தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்

என்னை வேதித்த என் தனி அன்பே1340

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரமெலாம் அளித்தே

என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனதுருவை

இன்புரு ஆக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டா

என்னுளம் கலந்த என்தனி அன்பே1350

தன்வசமாகித் ததும்பிமேல் பொங்கி

என்வசம் கடந்த என்னுடை அன்பே

தன்னுளே பொங்கிய தண்ணமுது உணவே

என்னுளே பொங்கிய என்தனி அன்பே

48    நித்திய விளக்கு

அருளொளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்

இருளற என்னுளத்து ஏற்றிய விளக்கே

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்

இன்புற என்னுளத்து ஏற்றிய விளக்கே

மயலற அழியா வாழ்வு மேன்மேலும்

இயலுற என்னுளத்து ஏற்றிய விளக்கே1360

இடுவெளி அனைத்தும் இயலொளி விளங்கிட

நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட

உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட

ஏற்றிய ஞான இயலொளி விளக்கே

ஆகம முடிமேல் அருளொளி விளங்கிட

வேகமது அறவே விளங்கொளி விளக்கே

ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி

காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே1370

49    நிறைமதி

தண்ணிய அமுதே தந்து என துளத்தே

புண்ணியம் பலித்த பூரணமதியே

உய்தர அமுதம் உதவி என்னுளத்தே

செய்தவம் பலித்த திருவளர் மதியே

பதியெலாம் தழைக்கப் பதம் பெறும் அமுத

நிதியெலாம் அளித்த நிறைதிரு மதியே

பாலெனத் தண்கதிர் பரப்பி எஞ்ஞான்றும்

மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

50    கருணை மழை

உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட

வயங்கிய கருணை மழைபொழி மழையே1380

என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப

மன்னிய கருணை மழைபொழி மழையே

உளங்கொளும் எனக்கே உவகைமேல் பொங்கி

வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

நலந்தர உடலுயிர் நல்லறிவு எனக்கே

மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்

வாய்மையால் கருணை மழைபொழி மழையே

51    செஞ்சுடர்

வெம்மல இரவது விடிதரு ணந்தனில்

செம்மையில் உதித்துளம் திகழ்ந்த செஞ்சுடரே1390

திரையெலாம் தவிர்த்துச் செவ்விஉற்று ஆங்கே

வரையெலாம் விளங்க வயங்கு செஞ்சுடரே

அலகிலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ

உலகெலாம் விளங்க ஓங்கு செஞ்சுடரே

முன்னுறு மலவிருள் முழுவதும் நீக்கியே

என்னுள வரைமேல் எழுந்த செஞ்சுடரே

ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த

ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே

52    அருட் கனல்

உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே1400

நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை

வலஞ்சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க்கனலே

வேதமும் ஆகமவிரிவும் பரம்பர

நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே

எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள்

நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு

நலமெலாம் அளித்த ஞானமெய்க் கனலே

53    பரஞ்சுடர்

இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு

பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே1410

வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி

பரம சித்தாந்தப் பதிபரஞ் சுடரே

சமரச சத்தியச் சபையில் நடம்புரி

சமரச சத்தியத் தற்சுயம் சுடரே

54    அருட்பெருஞ்ஜோதி

சபைஎன துளமெனத் தானமர்ந்து எனக்கே

அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி

மருளெலாம் தவிர்த்து வரமெலாம் கொடுத்தே

அருளமுது அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்

ஆழி ஒன்றளித்த அருட்பெருஞ்ஜோதி1420

என்னையும் பொருளென எண்ணி என்னுளத்தே

அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து

உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை

அலகில்பே ரருளால் அறிவது விளக்கிச்

சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது

உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்

சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்

இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்1430

ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்

சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா

அருளமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை

அருளறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்

அல்கலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி

உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட

இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி1440

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே

சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

உலகினில் உயிர்களுக்கு உறும்இடையூ றெலாம்

விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க1450

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி1456

திருச்சிற்றம்பலம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஓம் அகத்தீசாய நம

ஓம் நந்தீசாய நம

ஓம் திருமூலதேவாய நம

ஓம் கருவூர் தேவாய நம

ஓம் பதஞ்சலி தேவாய நம

ஓம் இராமலிங்க தேவாய நம

“ஞானியை பூஜிப்பவன் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி, இல்லறம் சிறப்பதோடு மட்டுமல்லாது ஞானியாவான் என்பது சத்தியம்”.

– தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்