Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

மகா சமாதி நிலை

          மகான் முருகப்பெருமானின் கல்கி அவதாரமாக ஒன்பது கோடி ஞானிகளால் போற்றப்பட்ட ஓங்காரகுடிலாசான் தவத்திரு ஆறுமுக அரங்கமாக தேசிக சுவாமிகள் மகான் முருகப்பெருமானின் திருவடிகளில் 17.09.1976 அன்று தனது தவத்தினை துவங்கினார். ஓங்காரக்குடிலாசானுக்கு மகான் முருகப்பெருமான் 26.04.1979 அன்று வாசி நடத்தி கொடுத்து, ஓங்காரகுடிலாசானின் வாசியோடு வாசியாக கலந்து இருந்தார். அன்று முதல், உலக நன்மைக்காக மகான் முருகப்பெருமானால் நடத்தப்பட்ட மாதவம் 14.05.2024 செவ்வாய்க்கிழமை அன்று முடிவுற்று ஓங்காரக்குடிலாசான் மகான் முருகப்பெருமானின் திருவடிகளில் சித்தி பெற்று இணைந்துவிட்டார்.

 

          இந்த உலகில் இதுவரை ஒன்பது கோடி ஞானிகள் தோன்றி உலக நன்மைக்காக தவமிருந்து சித்தி அடைந்துள்ளார்கள். அந்தப் பாரம்பரியத்தில் ஓங்காரக்குடிலாசான் 14.05.2024 அன்று சித்தி பெற்று மகா முக்தி நிலையான மரணமில்லா பெருவாழ்வை பெற்றுள்ளார்கள். இதுவரை உருவமாக நம்மிடையே இருந்து அருளாசி வழங்கி வந்த ஓங்காரகுடிலாசான் தற்போது அரூபமாக வியாபித்து அருளாசி வழங்கி வருகிறார்கள் என்பதை ஜீவ ஒளி தடமான மகா சமாதிக்கு வருகை புரிந்து வணங்கும்போதே உணரமுடியும்.

 

          ஓங்காரக்குடிலில் உள்ள மகான் புஜண்ட மகரிஷி மண்டபத்தின் ஞான மேடையில் அமைந்துள்ள ஓங்காரகுடிலாசானின் ஜீவ மகா சமாதியில் நடைபெறும் காலை மாலை பூஜையில் கலந்து கொண்டு தங்களது வேண்டுகோள்களை ஓங்காரகுடிலாசானின் திருவடிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

MAHA SAMADHI

          In the divine incarnation of Lord Muruga’s Kalki Avathar, His Holiness Arumuga Arangamaha Desiga Swamigal, referred as Ongarakudilasan by nine crore sages, initiated his spiritual journey at the Holy feet of Lord Muruga on 17.09.1976. Lord Muruga merged in divine communion with Ongarakudilasan on 26.04.1979 and bestowed his grace to start Holy penance for the global well being. After completing his severe penance, Ongarakudilasan attained Siddhi on 14.05.2024 and entered the state of Mahasamadhi which opens path to immortality.

 

          Ongarakudilasan, who was physically present among us until now, has become formless and continues to bestow his grace upon us. We invite you to participate in the morning and evening prayers at the sacred Mahasamadhi and submit your requests and prayers at his Holy feet.