Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3365

ஞானிகளை பூசிக்க பூசிக்க பூசிப்போரும் ஞானிகள் பெற்ற அந்த முற்றுப்பெற்ற நிலையாம் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று மிக ஆற்றல் பொருந்திய இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாத பிறப்பு இறப்பற்ற ஒளிதேகத்தை பெறலாம். என்றும் போற்றுவோம் முருகப்பெருமான் திருவடியை பெறுவோம் பேரின்ப வாழ்வை.  

குரு உபதேசம் – 3364

நீ என்னதான் உருகி உருகி பூசித்தாலும் சரி, முழுமை பலன் பெறமுடியாது. ஆதலால் உமது பூசை மரணத்தை வென்றவர்களும், பலகோடி யுகங்கள் வாழும் ஆற்றல் பொருந்திய மகான்களாகிய ஆறுமுகப்பெருமானார் தொட்டு அகத்தியர் முதல் வழிவழிவந்த மகான் அருணகிரிநாதர், திக்கெட்டும் புகழ்பெற்ற திருமூலதேவர், என்றும் பக்க துணையாய் இருக்கின்ற பதஞ்சலியார், பட்டினத்தார், நலம் பல தரும் நாவுக்கரசர், ஞானத்தலைவன் திருஞானசம்பந்தர், சுந்தரர், மகத்துவம் பொருந்திய மாமுனிவர் மாணிக்கவாசகர், நினைத்த அக்கணமே வந்து அருள் செய்யும் கருவூர்முனிவரும், காலாங்கிநாதரும், தாயினும் … Read more

குரு உபதேசம் – 3363

செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும்  வணங்கினால் அது மரணத்தை வென்ற வல்லவனாய் இருக்க வேண்டும்.

குரு உபதேசம் – 3362

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.