Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3322

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில், எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால், அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி விலகுவது … Read more

குரு உபதேசம் – 3321

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும், முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3320

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய, பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி, இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3319

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜீவதயவே சிறப்பறிவு தரும், ஜீவதயவே ஞான வாழ்வை தரும், ஜீவதயவே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயம் ஜீவதயவே ஆகும். ஜீவதயவே பக்தி, ஜீவதயவே ஞானம் என்பதை அறியலாம்.