News
MAY 2025

குரு உபதேசம் 4385
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனித வர்க்கத்தில் அவரவர் செய்திட்ட புண்ணியத்திற்கு ஏற்ப வேண்டுதலுக்கு ஏற்ப அருள் செய்வான் முதற்கடவுளாம் முருகப்பெருமான்.
எல்லோரும் எல்லாவற்றையும் வேண்டலாம். ஆனால் அவரவர் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் முருகன் அருள் செய்வான். அப்படி முன்ஜென்ம புண்ணியத்தில் இறைவன் கருணையாலே வேண்டுதலிற்கு ஏற்ப அளிக்கப்பட்ட பதவி, பட்டம், வாய்ப்புகள், பொறுப்புகள், அமைப்புகள் ஆகியவற்றை வரமாய் பெற்று வாழ்கின்றோர் தாம் வேண்டி விரும்பி பெற்ற அந்த வரத்திற்கேற்பவும் முருகனது நோக்கத்திற்கு ஏற்பவும், உலகினில் தர்மத்தினின்று மீறாமல் நடந்து கடைத்தேற வேண்டும். அவ்வாறின்றி தர்மத்தை மறந்து, தாம் முருகனிடத்து எதற்காக வரம் பெற்றோம் என்பதை மறந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் மறந்து, தாம் வந்த நோக்கம் மறந்து, தாம் பெற்ற அனைத்தும் தம்மால், தமது அறிவால், தமது செயல்களால், தமது திறமையால், தமது அதிர்ஷ்டத்தால் ஏற்பட்டது என தம்மை தாமே பெரிதாக எண்ணி வியந்து பாராட்டி கடவுளை மறந்து, தர்மத்தை மறந்து, பிற உயிர்கள் துன்பப்படும்படியாகவோ, நோக்கத்தை மறந்து செயல்படுவானேயானால் முருகப்பெருமானால் வரமாக அளிக்கப்பட்ட அத்துணையும் முருகனால் திரும்ப பெற்று கொள்ளப்படுவதோடு, தடம் புரண்டு செயல்பட்ட குற்றத்திற்கு தண்டிக்கவும் படக்கூடும் என்பதை அறிந்து கொள்வதோடு தர்மத்தின் வழிதனையும் முருகன் உணர்த்த உணர்ந்து கொள்ளலாம்.
……………..
ஆலவாய் அண்ணலின் அருந்தவப் புதல்வனே
ஞாலத்தை ஆள்வான் நல்மக்கள் போற்றவே.