Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 22

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   சித்தாந்தம் : சைவநெறியின் முடிவுநிலை. தூய சைவ சித்தாந்தத்தின் முடிவு நிலையான பேரின்பப் பெருவெளியாகவும், அந்தத் தனிச்சிறப்பு மிக்க ஞானசபையாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 21

சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   வேதாந்தம் : வேதங்களின் முடிவு ( வேதம் + அந்தம் ) துரியம் : வேதாந்தத்தின் முடிவு. துரியம் மேல் : துரியாதீதம்.  அத்தகு : அந்த தகுதியுடைய   தூய வேதாந்தத்தின் உயர் நிலையான துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தில் விளங்கும் ஞான வெளியாகிய, அந்த மகத்தான தகுதியுடைய சிற்சபையாகவும் திகழும் … Read more

தினம் ஒரு அகவல் 20

பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி   பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   நாதாந்தம் : ஒலியின் முடிவு ( நாதம் + அந்தம் ) – ஓம் சிற்றம்பலம் : சிற்சபை, ஞானசபை.   எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஒலியாகிய பரம்பொருளை (“ஓம்”) உணரும் நிலையே நாதாந்தமாகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமை பொருந்திய ஞானவெளியில், “ஓம்” என்ற ஞானசபையில் வீற்றிருக்கிறார்.

தினம் ஒரு அகவல் 19

19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   விமல போதாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   போதாந்தம் – அறிவின் எல்லை ( போதம் + அந்தம் ) விமலம் : மாசற்ற, குற்றமற்ற மாசற்றதும், அறிவின் இறுதி நிலையானதும் ஆகிய மெய்ப்பொருளைக் கொண்ட ஞான வெளியாகவும், களங்கமற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 18

18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும் ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   ஞான யோகாந்த நடத் திரு வெளியெனும் ஆனி இல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   யோகாந்தம் : யோகத்தின் முடிவு ( யோகம் + அந்தம் ) ஆனி இல் – குற்றமற்ற ஞான யோகத்தின் எல்லையாக இறைவன் திருநடனம் புரியும் தூய வெளியாகவும், எவ்விதக் குறையும் அற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருள்மயமான ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 17

தூயக லாந்த சுகந்தரு வெளியெனும் ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   தூய கலாந்த சுகம் தரும் வெளி எனும் ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   கலாந்தம் : கலைகளின் முடிவு ( கலை + அந்தம் ) தூய்மையான கலைகளின் எல்லையைக் கடந்ததுமான பேரின்பத்தைத் தரும் வெளியாகவும், சிறப்புடன் நிலைபெற்ற ஞானசபையாகவும்  திகழும் அருள்மயமான பேரொளியே

தினம் ஒரு அகவல் 16

16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த மெய்ஞ் ஞான சுக உதய வெளி எனும் அத்துவிதச் சபை அருட்பெருஞ்ஜோதி !   தூய மெய்யறிவின் மூலம் பேரின்பத்தை இரண்டற்ற ( முழு நிலையில் ) நிலையில் அருளும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தினம் ஒரு அகவல் 15

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும் அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த சன்மார்க்க சுகத் தனிவெளி எனும் அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   சிற்சபை என்பது ஞானத்தின் ஊற்றுக்கண்ணாகும். உயிர்களின் உள்ளத்தில் ஞானம் பிரகாசிக்கும் இடமே சிற்சபையாகும். இந்த சிற்சபையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வீற்றிருக்கும் சபையாகும். தூய சத்தினால் கிடைக்கக்கூடிய பேரானந்த நிலையே ஞான நிலையாகும். மகான் வள்ளலார் வழிவகுத்த சுத்த சன்மார்க்கம் இந்த நிலைக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.