News
APRIL 2026
17th April 2026
தினம் ஒரு அகவல் 197 -198
197 -198 பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிக எனப் பணித்து எனக்கருளி என்
ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !
இந்த உலகம் உயர்வு அடைய செய் என்று எனக்கு ஆணையிட்டு எனக்கு அருள் செய்து என் உயிருக்குள் ஆன்மாவாக ஒளி வீசிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி !


