News
APRIL 2026
19th April 2026
தினம் ஒரு அகவல் 201 – 202
201-202
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !
(வேதங்களும், ஆகமங்களும்) எந்த வழியை உண்மையான முக்திக்கு வழி (மெய்வழி) என்று போற்றிக் கூறுமோ, சரியான அந்த வழியையே எனக்குத் தெளிவாகக் காட்டி அருளிய அருட்பெருஞ்ஜோதி!


