News
JUNE 2026
22nd June 2026
தினம் ஒரு அகவல் 326
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி – 326
உருள் சகடாகிய உளம் சலியா வகை
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி !
உருண்டு ஓடும் சக்கரத்தைப் போல நிலையற்று அலைந்து திரியக்கூடிய என்னுடைய மனம், இனிமேல் சோர்வடையாமல், அருள் நெறியாகிய ஒரே பாதையில் உறுதியாக நிலைபெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


