News
JULY 2026
தினம் ஒரு அகவல் 356
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி – 356
புவியுறு புவியாய்ப் புவி நிலைப் புவியாய்
அவை கொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி !
பூமியின் உள்ளே அடங்கியுள்ள நுட்பமான சக்தியாகவும், பூமி நிலைப்பெற்று நிற்பதற்கான மூல ஆதாரமாகவும் விளங்கி, எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ளும் வண்ணம் பிரபஞ்சம் முழுவதும் விரிவடைந்த அருட்பெருஞ்ஜோதியே!


