News
JULY 2026
தினம் ஒரு அகவல் 382
மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 382
மண்ணில் ஐந்து ஐந்து வகையும் கலந்து கொண்டு
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !
நிலம் என்னும் பூதத் தத்துவத்தில், மற்ற நான்கு பூதங்களின் கூறுகளையும் ஐந்தாகக் கலந்து, அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பொருந்தும்படி செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


