News
JULY 2026
20th July 2026
தினம் ஒரு அகவல் 380
மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 380
மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பல நிலை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
பஞ்சபூதங்களில் மண் தத்துவம் அடியாகவும், ஆகாயம் முடியாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த நிலையில் பல நிலைகளையும் வகுத்து பொருந்துமாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி!


