News
JULY 2026
தினம் ஒரு அகவல் 388
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 388
மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலத்தில் காணப்படும் ஒளிரும் ஆற்றல்களையும் (கற்கள், உலோகங்களில் உள்ள ஒளி உட்பட), உயிர்கள் தோன்றுவதற்கு ஆதாரமாக விளங்கும் கருச் சக்திகளையும் (விதை, கர்ப்பம்) அவற்றின் இயல்புக்கேற்பப் பொருந்தும்படிச் செய்த பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


