News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 406
நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 406
நீரினில் பசுமையை நிறுத்தி அதில்பல
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர் என்னும் பூதத்தில், தாவரங்கள் மற்றும் நிலத்தின் வளமான பசுமைத் தன்மையை நிலைபெறச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பலவிதமான உணவுப் பொருட்களும் இன்பங்களும் உயிர்களுக்குக் கிடைக்கப் பொருந்தும்படி அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


