News
OCTOBER 2026
13th October 2026
தினம் ஒரு அகவல் 536
புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 536
புகல் அரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புகல் அரு – சொல்வதற்கு முடியாத
சொல்லி விளக்க முடியாததும், எல்லையற்றதும், முழுமையானதுமான பரம்பொருளின் மையச் சக்தியால், உள்ளத்தின் இயக்கத்தை ஒழுங்குறப் பிரித்து அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


