News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 550
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 550
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரின் இயல்பில் நெருப்பின் சக்தியையும், அந்த நெருப்பின் சக்தியின் இயல்பில் உயிர்ப்பாகிய (பிராணன் / காற்று) சக்தியையும் நிலைபெறும்படி செய்து, அவை அனைத்தும் உயிர்கள் வாழ்ந்து இன்பம் அடைய வேண்டும் என்பதற்காக முறையாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


