News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 558
உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 558
உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
அயல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உணர் கலை – ஞானம் அயலற – வேறுபாடின்றி
உயிர் ஜீவாத்மாவை, அறிவு மற்றும் ஞானம் என்னும் கலைகளை இயக்கும் உணர் கலை வெளியில் வேறுபாடு ஏதும் இன்றி, இரண்டையும் ஒரே தன்மை உடையதாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


