News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 584
சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 584
சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை
அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
படைப்புத் தொழிலைச் செய்யும் தலைவர்களையும், அவர்கள் அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தேவையான அண்டங்களையும், தனது ஒப்பற்ற அருள் ஆற்றலால் வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


