News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 604
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 604
பரசிவ பதியைப் பர சிவ அண்டங்களை
அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
உயர்ந்த சிவமாகிய தலைவனையும், அந்தச் சிவ தத்துவத்தின் கீழ் இயங்கும் மேலான அண்டங்களையும், அவை அனைத்தும் ஒரு பேரரசைப் போலத் தடையின்றி ஆளும் அதிகாரம் பெற்றுத் திகழும் வண்ணம் அமைத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


