News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 620
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 620
மலை இடைப் பல்வளம் வகுத்து அதில் பல்லுயிர்
அலைவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
மலைகளுக்குள்ளே எண்ணற்ற இயற்கை வளங்களைச் சேமித்து வைத்து, அந்த மலைகளைச் சார்ந்து வாழும் பல கோடி உயிரினங்கள் எவ்வித துன்பமும் இன்றிப் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


