News
NOVEMBER 2026
24th November 2026
தினம் ஒரு அகவல் 618
கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 618
கடல் இடைப் பல் வளம் கணித்து அதில் பல்லுயிர்
அடலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
உப்பு முதல் முத்துக்கள் வரை பல வகையான பொருட்களை தருவதோடு பல வகையான உயிரினங்களையும் தன்னகத்தே வாழ்வதற்கும் ஏற்ப கடல் வளத்தை அமைத்த அருட்பெருஞ்ஜோதி !


