News
MAY 2026
தினம் ஒரு அகவல் 236
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 236
நீடுக நீயே நீள் உலகம் அனைத்தும் நின்று
ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி !
நீயே மரணமிலாப் பெருவாழ்வுடன் நீடூழி வாழ்வாயாக! மேலும், பரந்து விரிந்த உலகங்கள் அனைத்தையும் நீயே நிலைத்து நின்று ஆட்சி செய்வாயாக” என்று பரம்பொருளின் சகல அதிகாரத்தையும் எனக்கு வழங்கி ஆணையிட்ட அருட்பெருஞ்ஜோதியே!


