News
MAY 2026
7th May 2026
தினம் ஒரு அகவல் 238
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 238
முத்திறல் வடிவமும் உன்னி ஆங்கு எய்துறும்
அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !
உலக இயக்கங்களின் அடிப்படையான ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற வல்லமைகளை அளித்ததோடு, நினைத்ததை உடனே கைக்கூட செய்யும் வல்லமையையும் அருளும் அருட்பெருஞ்ஜோதி !


