News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 318
உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி – 318
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள் நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி !
வடிவம் (உருவம்), வடிவம் இல்லாமை (அருவம்), இரண்டும் கலந்த வடிவம் (உபயம் – உருவ அருவம்) ஆகிய முப்பரிமாணங்களையும் கடந்து நிற்கும் இறைவனின் அருள் நிலையின் (ஜோதி சொரூபத்தின்) உண்மையை எனக்குத் தெளிவாக வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதியே!


