News
JULY 2026
தினம் ஒரு அகவல் 352
புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி – 352
புனலினுள் புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
அனையெனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி !
நீரின் உள்ளே அடங்கியுள்ள நுட்பமான நீராகவும், அந்த நீருக்கே ஆதாரமான நிலைச் சக்தியாகவும் விளங்கி, நீரின் தன்மையைப் போலவே எல்லாத் திசைகளிலும் பெருகி விரிவடைந்து ஓங்கி நிற்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


