News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 446
தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 446
தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பில் பல சித்துக்கள் பொருந்தி அமைந்துள்ளது. உடல் வெப்பம் என்பது இயற்கையான ஒன்று. யோக நிலையில் அந்த வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதும், ஞான நிலையில் அக்னியை ஒருமுகப்படுத்தி பயன்படுத்துவதும் போன்ற சித்திகளின் மூலமே நெருப்பு என்ற பஞ்சபூதம் என்பது குறிப்பிடத்தக்கது


