News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 448
தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 448
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வேதங்களில் கூறப்பட்டு இருக்கும் யாகங்களிலும், வேள்விகளிலும், சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஞான தத்துவங்களிலும் நெருப்பின் ஆற்றல் அறியப்படுகின்ற வகையில் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.


