News
SEPTEMBER 2026
4th September 2026
தினம் ஒரு அகவல் 466
காற்றினி லூறியல் காட்டுறு பலபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி – 466
காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பஞ்சபூதங்களில் காற்றில் மட்டுமே உள்ள தொடு உணர்ச்சி என்னும் இயல்பையும், அந்த உணர்ச்சியின் மூலம் வெளிப்படும் பலவிதமான தன்மைகளையும் தனது பேராற்றலால் அமைத்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


