News
SEPTEMBER 2026
12th September 2026
தினம் ஒரு அகவல் 480
காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி – 480
காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்று என்னும் பஞ்சபூதத்தின் துணைகொண்டு, பலவிதமான உயிர்களையும், அவற்றின் பலவிதமான இயக்க நிலைகளையும், பலவிதமான நுட்பமான கலைகளையும் வல்லமையுடன் முறையாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


