News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 488
காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 488
காற்றினில் பக்குவக் கதியெலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்று வீசும் தன்மையை பக்குவப்படுத்தி உலக உயிர்கள் அதன் பயன்களை அனுபவிக்கவும், உடல் பிராண வாயுவை பக்குவமாக கொண்டு முக்தி நிலையை அடையவும் நுட்பமான வகையில் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


