News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 498
வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 498
வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாயமெங்கும் பரந்துள்ள ஒலிகளையும் (நாதங்கள், சப்தங்கள்), இந்த விரிந்த வெளியில் உள்ள அனைத்து நிலைகளையும் (அண்டங்களின் இருப்பு, இயக்க விதிகள்) கருணைக் கொண்டு முறையாகவும், அழகாகவும் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


