News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 512
வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 512
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாய தத்துவத்தை இதுவரை விவரித்துள்ள விரிவான நிலைகளுக்கு அப்பாலும் இன்னும் பல்வேறு நிலைகளை பிரபஞ்ச இயக்கமாக கருணையோடு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !
அகம் – உள் புறம் – வெளி நடு – மையம், தொடர்பு, உள்ளம். முதல் – தோற்றம், கடை – முடிவு, தலை – ஆரம்பம்,


