News
NOVEMBER 2026
12th November 2026
தினம் ஒரு அகவல் 594
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 594
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
விந்து எனப்படும் மூல சக்தியையும், அந்தச் சக்தியின் அடிப்படையில் இயங்கும் நுட்பமான அண்டங்களையும், தனது மேன்மையான பேராற்றலால் வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


