News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 592
தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 592
தெளிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உயிர்களின் அறியாமையை நீக்கி மெய்ஞானத் தெளிவைத் தரும் தலைவர்களையும், அந்த அருள் ஒளி வீசும் அண்டங்களையும், தனது மேலான கருணை பொங்கும்படி வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி! ஐந்தொழில்களில் இதுவே “அருளல்” எனப்படுகிறது.


