News
APRIL 2026
25th April 2026
தினம் ஒரு அகவல் 214
மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 214
மயர்ந்திடேல் சிறிது மனம் தளர்ந்து அஞ்சேல்
அயர்ந்திடேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !
சிறிது கூட மயங்கிப் போக வேண்டாம், மனம் சோர்வடைந்து பயப்பட வேண்டாம், எந்த நிலையிலும் அயர்ந்துவிட வேண்டாம் என்று எனக்கு உறுதி அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


