News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 216
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி – 216
தேசு உறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல்
ஆசு அறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி !
தேசு – பிரகாசம்
தேசு உற – பிரகாசமாய்
ஆசு – குற்றம்
ஆசற – குற்றமற்ற
பிரகாசமாக ஒளி வீசுகின்ற புனிதமான சுத்த சன்மார்க்கப் பாதையின் (திருநெறி) உண்மையான இலக்கின் தன்மையை (உண்மைப் பொருளின் இயல்பு) எனக்கு எந்தவித குற்றமும் இல்லாமல் (ஆசற) தெளிவாக உணர்த்தி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


