News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 218
காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி – 218
காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி !
ஆட்டியல் – இயக்கம் (ஆட்டுவித்தல்), கூத்து
தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகங்கள் அனைத்தையும், அளவற்ற கருணையைக் கொண்டு, சித்திகளின் ஆற்றல் துணை கொண்டு இயக்கிக் கொண்டிருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


