News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 220
எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 220
என் குலம் எம் இனம் என்பது தொண்ணுற்றாறு
அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி
எம்முடைய குலம் என்பதையும் எம்முடைய இனம் என்பதையும், வெறும் 96 அங்குலம் தான் என்று எனக்கு புரிய வைத்து அருள் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !
தன் விரல்களின் அளவால் மனிதனின் உயரம் 96 அங்குலமாக இருக்கும். உடல் 96 தத்துவங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது.


