News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 322
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்து
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி – 322
தெருள் நிலை இது எனத் தெருட்டி என் உளத்தில் இருந்து
அருள் நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி !
உண்மையான, தெளிவான ஞானநிலை இதுவே என்று எனக்குத் தெளிவாக உணர்த்தி, என்னுடைய உள்ளத்திலேயே நிரந்தரமாக நிலைபெற்றிருக்கும் அருள் என்னும் நித்திய நிலையை (ஜோதி சொரூபத்தை) எனக்குக் காட்சி அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


