News
JULY 2026
4th July 2026
தினம் ஒரு அகவல் 346
அனலினு ளனலா யனனடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி – 346
அனலின் உள் அனலாய் அனல் நடு அனலாய்
அனலுற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !
நெருப்பின் உள்ளே அடங்கியிருக்கும் நுட்பமான நெருப்பாகவும், அந்த நெருப்பின் மையத்திலும் மூல ஒளியாக இருந்தும், அந்த நெருப்புடன் நெருக்கமாக ஒளிர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


