News
JULY 2026
5th July 2026
தினம் ஒரு அகவல் 348
அனலுறு மனலா யனனிலை யனலாய்
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 348
அனல் உறும் அனலாய் அனல் நிலை அனலாய்
அனல் உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி !
நெருப்பின் உள்ளே அடங்கியிருக்கும் நுட்பமான நெருப்பாகவும், அந்த நெருப்பு நிலைப்பெற்று நிற்பதற்கான மூல ஆதாரமாகவும் விளங்கி, நெருப்புடன் பொருந்தியே பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


