News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 412
நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 412
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஆருற – நிறைவு உண்டாகும்படி செய்த
நீருக்குள்ளே (உயிர்த் தோற்றத்திற்குக் காரணமான) அடிப்படை ஆக்க சக்தியை (கருநிலையை) நிலைபெறச் செய்து, அந்தச் சக்தியிலிருந்து எண்ணற்ற வடிவங்களும், உயிர்களும் நிறைவுறும்படி நுட்பமாக வகுத்து அமைத்தருளிய பேரருள் ஒளியே!


