News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 414
நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 414
நீரிடை நான்குஇயல் நிலவுவித்து அதில்பல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீருக்குள்ளே அதன் அடிப்படை நான்கு விதமான இயல்புகளை நிலைநிறுத்தி, அந்த இயல்புகளின் மூலமாகவே உலக உயிர்கள் பலவிதமான பயன்களைப் பெற்று நிறைவுறும்படி நுட்பமாகப் பகுத்து அமைத்த பேரருள் ஒளியே!


