News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 222
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 222
எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி
எந்த மதத்தைப் பின்பற்றுவது? எந்த இறைவனை வழிபடுவது?” என்று சந்தேகத்துடன் கேட்டு நிற்கும் மனிதர்களிடம் “அந்த மதம், அந்த இறைவனும் நாமே“ (அருட்பெருஞ்ஜோதியே) என்று அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


