News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 308
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி – 308
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி !
ஆத்திரம் – ஆ + திரம் – வியந்திடும் வல்லபம்
உன்னை வணங்கி உன்னுடைய புகழைச் சொல்லத் தெரியாதவனாகவும், உனது அருளைப் பெறுவதற்கு தகுந்த பாத்திரமாக இல்லாதவனாகவும் இருந்த என்னிடத்தில், மிகுந்த ஆன்மீக வல்லபத்தையும், ஆர்வத்தையும் அளித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


