News
JUNE 2026
15th June 2026
தினம் ஒரு அகவல் 312
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி – 312
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி !
மனித முயற்சிகளால் எளிதில் அடைய முடியாத உயர்ந்த நடுநிலைப் பகுதியில் என்னை ஏற்றி, முப்பத்தாறு (ஆறாறு) தத்துவங்களைக் கடந்து சென்று, நித்திய நிலையை அடையச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


