News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 330
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி – 330
சுருள் விரிவுடை மனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி !
சுருங்குதல், விரிதல் என நிலையற்று அலைந்து திரியக்கூடிய மனதின் சலனங்கள் அனைத்தையும் நீக்கி, என்னுடைய உள்ளத்தில் அருள் என்னும் ஞான ஒளியை முழுவதுமாக நிரப்பியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


